குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்து முகத்தில் எச்சில் துப்பியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பிரின்ஸெஸ் அவென்யூவில் தெய்வேந்திரம் பாலகுமார் என்பவர் குடிபோதையில் படுத்திருக்கிறார். இதனால் அவரை போலீசார் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அவர் மது போதையில் கோபமாக ஒரு போலீசாரை எட்டி உதைத்ததோடு மற்றொருவரின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளார்.
இந்த காரணத்தினால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவருக்கு நிலையான முகவரி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீதான வழக்கு வெல்லிஸ்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இது தொடர்பான தீர்ப்பு சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படிதெய்வேந்திரம் பாலகுமாருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.