Categories
உலக செய்திகள்

கத்தி வைத்துக்கொண்டு திரிந்த நபர் சுட்டுக்கொலை.. சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை..!!

கனடாவில் கத்தி வைத்து கொண்ட அலைந்த நபர் பெண்ணை தாக்கியதோடு, காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

கனடாவில் உள்ள Toronto வில் இருக்கும் Midtown என்ற பகுதியில் கத்தி வைத்துக்கொண்டு ஒரு நபர் அலைந்துகொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின்பு, அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

எனவே மற்றொரு அதிகாரி அவரை சுட்டுவிட்டார். இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் Andy Singh என்ற இன்ஸ்பெக்டர் இது குறித்து கூறுகையில், அந்த நபர் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் அந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் தாக்கியதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபரின் குடும்பத்தினர் தான், ஒருவர் கத்தி வைத்துக்கொண்டு அலைந்துகொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். மேலும் இச்சம்பவம் தொடர்பில் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ளவுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |