Categories
உலக செய்திகள்

ஆப்பிள் பழம் ஆர்டர் பண்ணுனேன்…. ஆனால் இது வந்துருக்கு…. பையினுள் காத்திருந்த பேரதிர்ச்சி….!!

ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்த பையினுள் ஆப்பிள் ஐ போன் இருந்ததை கண்டு ஒரு நபர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

லண்டன் நகரில் ட்விக்கன்ஹாம் பகுதியில் டெஸ்கோ பல்பொருள் அங்காடி உள்ளது. அங்கு ஆப்பிள் பழங்களை ஜேம்ஸ் என்பவர் ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த ஆப்பிள் நிறைந்த பையை பெற்றுக்கொண்டு அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் ஆப்பிள் பழங்களுடன் ஒரு புதிய ஆப்பிள் ஐபோன் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த போன் தவறுதலாக தனக்கு கிடைத்துள்ளது என்று நினைத்துள்ளார். ஆனால் அது அவருக்கு தவறுதலாக கிடைக்கவில்லை.

டிஸ்கோ நிறுவனம் கடந்த சில நாட்களாக தங்கள் நிறுவனத்தில் பொருட்களை வாங்கும் சில வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் ஆப்பிள் ஐபோன் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கி வருகிறது. அதன்படி ஜேம்ஸ் வாங்கிய ஆப்பிள் பழத்திற்கு பரிசாக ஆப்பிள் ஐபோன் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது “நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதேனும் சாதாரண பரிசாக இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |