புனேவை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க முகக்கவசம் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. ஆகையால், தனிமனித சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர். கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது அத்யாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் முகக்கவசம் உடைக்கு ஏற்றார் போல பல வித மாடல்கள் வந்துவிட்டன.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் தங்கத்தினால் ஆன முகக்கவசம் அணிந்து வலம் வருகிறார். தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், முகக்கவசத்தையும் தங்கத்தில் தயார் செய்து அணிந்துள்ளார். சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பிலான முகக்கவசம், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்குமா என்பது சந்தேகம் தான்,. இருப்பினும், அதில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளதால், சுவாசத்துக்கு பிரச்னை இல்லை என்கிறார் ஷங்கர்.