காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையான நபர் ஒருவர் தனது இரண்டு காதுகளையும் அகற்றி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது பலருக்கும் விசித்திரமான பொழுதுபோக்காகவே உள்ளது. சிலர் வாய் மூக்கு போன்ற பகுதிகளை அழகாக மாற்ற இந்த சர்ஜரி செய்து கொள்வது வழக்கம். ஆனால் சாண்ட்ரோ என்ற நபர் இந்த காஸ்மெட்டிக் சிகிச்சைக்கு அடிமையாகி தனது காதுகளையே அகற்றி கொண்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த சாண்ட்ரோ சர்ஜரி செய்வதற்கு அடிமை ஆனவர்.
இதுவரை அதற்கென்று 5.8 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார். அவரது நாக்கு, நெற்றி, கை என பல பகுதிகளில் ஏராளமான மாற்றங்களை செய்துள்ளார். அதோடு உச்சகட்டமாக 2019ஆம் ஆண்டு தனது இரண்டு காதுகளையும் அகற்றுவதற்கான சிகிச்சையும் செய்து ஒரு ஜாடியில் காதுகளை பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.
உடலில் பல மாற்றங்களை செய்து கொண்ட அவரது வாழ்க்கையில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது என கூறுகிறார் சாண்ட்ரோ. இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது இந்த மாற்றம் எனது வாழ்க்கையை மிகவும் பாதித்தது. ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
எனது தோற்றத்தின் காரணமாக பல வேலைகளை இழந்து உள்ளேன் காரணம் இன்னும் நிறைய நிறுவனங்கள் பழமைப் நிறைந்ததாகவே இருக்கின்றன. என்னை நோக்கி வரும் விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை” என கூறியுள்ளார். இதுவரை தனது உடலில் 17 சர்ஜரி செய்து கொண்ட இவர் உடல் முழுவதும் டட்டூக்களும் போட்டுள்ளார்.