காவல்துறை அதிகாரியின் கொலைவழக்கில் ஜெயிலுக்கு சென்று ஜாமினில் வெளிவந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ற 2018 ஆம் ஆண்டு திருமங்கலம் அருகில் காவல்துறை அதிகாரியான மோகன்ராஜ் என்பவரை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வேல்முருகன் ஜாமினில் வெளி வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்திற்கு விரைவாக சென்று வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் விசாரணையில் வேல்முருகன் குடிபோதையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.