லாட்டரி சீட்டில் விழுந்த பரிசு தொகை மற்றும் தனது காதலியுடன் முதன் முறையாக சென்ற டேட்டிங் இரண்டும் ஒரே நாளில் கிடைத்ததால் இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.
பிரித்தானியாவில் டுட்லீ நகரில் லூக் அஷ்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வருகிறார். இவர் அண்மையில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரிச் சீட்டில் £250,000 என்ற பிரம்மாண்ட பரிசு தொகையும் விழுந்துள்ளது. அதே நாளில் தனது மனதுக்கு நெருக்கமான காதலியுடன் அவர் டேட்டிங் சென்றுள்ளார். அஸ்மனும் அவருடைய காதலியும் ஏற்கனவே பழகி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் ஒருநாள் கூட வெளியில் சென்றதில்லை.
அவர் தனது காதலியுடன் முதல் முறையாக வெளியில் சென்ற நாளிலேயே அவருக்கு லாட்டரி பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது “ஒரே நாளில் இரண்டு பரிசுகளை வென்றுள்ளேன். ஆம்!.. லாட்டரியில் விழுந்த பரிசு மற்றும் காதலியுடன் டேட்டிங் சென்றதை தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன். அந்த இரவு நாங்கள் சாப்பாட்டுக்கு வெளியே சென்றோம். இந்த நிகழ்வை நாங்கள் அற்புதமான உணவுடன் கொண்டாடினோம். மேலும் இந்த பரிசு பணத்தில் முதலில் நான் கார் வாங்க விரும்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.