தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் நாளுக்கு நாள் ஒவ்வொரு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் இயக்குனர் தங்கர்பச்சான் ஊடகங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி, ஆளுக்கு ஒரு பத்திரிகை என்று வைத்திருக்கிறார்கள். எவ்வளவு நேர்மையான செய்தியை, நியாயமான கருத்துக்களை மக்களுக்கு அவர்களால் தர முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.