Categories
தேசிய செய்திகள்

‘இரவில் இறந்து கிடந்த பெண்”… பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்… கணவர் மற்றும் குடும்பத்தார் அரங்கேற்றிய கொடூரம்.!

திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் இறந்த நிலையில்,கணவர் மற்றும் குடும்பத்தார் விஷம் வைத்து கொன்று விட்டதாக பெண்ணின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் லோஹாரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் பட்டேரி.. இவருக்கு வயது 21 ஆகிறது.. இந்த பெண்ணுக்கும், ஹுசைன்  என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (10ஆம் தேதி) இரவு வீட்டில் பட்டேரி  விஷம் குடித்த நிலையில்  இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் அளித்த புகாரில், எனது மகளை அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தினமும் அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். அதிலும் அவரது கணவர் ஹுசைன்  எனக்கு கார் வேண்டும் என்று தொடர்ந்து தாக்கி வந்துள்ளார்.. எனது மகள் இறப்பதற்கு முந்தைய நாள் தனக்கு போன் செய்து, அழுதுகொண்டே கணவர் மற்றும் மாமனார், மாமியார் என்னை அடித்து துன்புறுத்துவதாக கூறினார்.

மேலும் அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து எனது மகளுக்கு வலுக்கட்டாயமாக வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.. இந்த புகாரை அடுத்து கணவர் ஹூசைன் மற்றும் அவரது பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |