குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்தது. இப்போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பலரும் காயமடைந்தனர்.
தற்போது அங்கு அங்கு கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதையடுத்து டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் லக்னோ மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, கோவை சென்னை லயோலா உட்பட பல்வேறு பகுதிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றுள்ளனர். கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.