Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது.

இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதியின் கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், ராஜா உட்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் பரப்பும் செயலில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக கூடுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக அரசை கடுமையாக சாடி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனால் பல்வேறு வழக்குப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |