உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர், மக்கள் என அனைவரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். அந்த வகையில், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், ”அனைவரிடத்திலும் அன்பு, பகைவரிடத்திலும் பரிவு, சகோதரத்துவம் உள்ளிட்ட வாழ்க்கை நெறிகளை வழங்கிய இயேசு காட்டிய பாதையில் உலகம் தழைத்திட அனைவரும் இயன்றதை செய்ய வேண்டும். கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் 'கிறிஸ்துமஸ்' வாழ்த்துச் செய்தி. pic.twitter.com/uM8scV9pmC
— AIADMK (@AIADMKOfficial) December 24, 2019