சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ஒரு ராணுவ விமானம் ஓன்று மாயமானது. நேற்று மாலை சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அதில் (38) பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது. மாயமான விமானம் சி-130 ஹெர்குலஸ் வகையை சேர்ந்தது. இதுகுறித்து சிலி அதிபர் செபஸ்டியன் பினேரா கூறும்போது, நான் ராணுவ விமானம் மாயமான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.