உத்திரபிரதேச மாநிலத்தில் அஸாம் கார்கின் பகுதியை சேர்ந்த ஜிலாஜீத் மௌர்யா என்ற பேச்சு குறைபாடுடைய மாற்றுத்திறனாளி நபர் கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றபோது காணாமல் போய் உள்ளார். இவருக்கு தற்போது 35 வயது ஆகும் நிலையில் சோசியல் மீடியாவின் உதவியுடன் அவர் கையில் போட்டிருந்த டாட்டூ அடையாளத்தை வைத்து குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு ஜிலாஜீத் மௌரியா திரும்ப கிடைத்தது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜிலாஜீத் வீட்டிற்கு திரும்பி வந்தபோது குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.