Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நானும் ரௌடி தான்”… தெனாவெட்டாக சுற்றியவரை ஓட ஓட வெட்டிக்கொன்ற கும்பல்..!!

அறந்தாங்கியில் ரவுடியாக வலம் வந்த சுமை தூக்கும் தொழிலாளியை ஓட ஓட விரட்டி சரமாரியாக ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, எல்.என் புரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாவார்.. இவர் அடிதடி வழக்குகள் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளதால் ரவுடியாக அறியப்படுகிறார். அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய  பெயரை ‘இடி’ மணி என மாற்றி வைத்துக்கொண்டு கெத்தாக சுற்றி வந்துள்ளார்.

இந்த செயலால் பல பேருடன் இடி மணிக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தனது நண்பரான கூத்தாடி வயலைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் இடி மணி அறந்தாங்கி-கட்டுமாவடி சாலை அருகே பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர், இடி மணியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தடுக்க வந்த சதீஷுக்கும் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. இதில் பலத்த படுகாயமடைந்த இடிமணி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Categories

Tech |