Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு அழைத்து… கணவனை கொலை செய்த தந்தை… ஒரு மாதத்தில் சடலமாக தொங்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!

காதல் கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவியும் தூக்கிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான விஜய் என்பவர் ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர்களது திருமணத்துக்கு ராஜேஸ்வரியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து 6 மாதமாக பிரித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி விஜய்யை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அப்பெண்ணின் தந்தை உட்பட சிலர் அடித்து கொலை செய்துவிட்டு பின் சாலையோரம் தூக்கி வீசியுள்ளனர்.

இந்தவழக்கில் ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் சிறையில் உள்ளனர்.. இந்நிலையில் கணவன் கொலை செய்யப்பட்டு ஒரு மாதமே ஆகின்ற நிலையில், கணவன் உயிரிழந்த அதே ஞாயிற்றுக் கிழமையில், தாய் வீட்டிலிருந்து வந்த ராஜேஸ்வரி வீட்டிலயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தசம்பவம் தொடர்பாக மகேந்திர மங்கலம் போலீசார் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Categories

Tech |