Categories
மாநில செய்திகள்

“ஒரு‌ மாதம் சிறை தண்டனை”….. ராணி மேரி கல்லூரியில் நடந்த மறக்க முடியா சம்பவம்….. கலங்கிப் போன தருணத்தால் நெகிழ்ந்த முதல்வர்…..!!!!

சென்னையில் உள்ள பழமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. இந்த கல்லூரியில் நுழைந்தபோது என் வாழ்நாளில் நடந்த பழைய விஷயங்கள் அனைத்தும் என் மனதுக்கு வந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அதாவது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ராணி மேரி கல்லூரியை இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் காரணமாக கல்லூரியில் படித்த அனைத்து மாணவிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணி மேரி கல்லூரியை இடிக்க கூடாது என நாங்களும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். ஆனால் அரசாங்கம் கல்லூரிக்கு வரும் குடிநீரை நிறுத்தியதோடு கழிவறைகளையும் பயன்படுத்தக் கூடாது என கடுமையான தடைகளை விதித்தது. இதனால் கலைஞர் கருணாநிதியின் உத்தரவின்படி நான் பொன்முடி உட்பட சிலர் கல்லூரிக்கு வந்தோம். அப்போது கல்லூரியின் காவலர் எங்களுக்கு வணக்கம் தெரிவித்து கேட்டை திறந்து உள்ளே அனுமதித்தார். நாங்கள் மாணவிகளை சந்தித்து தைரியமாக இருங்கள் உங்கள் போராட்டத்திற்கு என்றும் திமுக என்றும் துணையாக நிற்கும் என்று கூறினோம்.

இந்த சம்பவம் நடந்த பிறகு வேளச்சேரியில் உள்ள என்னுடைய வீட்டிற்கு காவலர்கள் வந்தார்கள். அவர்களிடம் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டபோது அத்துமீறி கேட் ஏறி குதித்த காரணத்திற்காக உங்களை கைது செய்கிறோம் என்று கூறினர். இதனால் ஒரு மாதம் கடலூரில் உள்ள கேப்பர் சிறையில் இருந்தோம். இந்த தண்டனையை நாங்கள் மாணவர்களுக்காக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம். மேலும் கடலூர் சிறைக்கும் கேப்பர் என்ற பெயர். இந்த கல்லூரிக்கும் கேப்பர் என்ற மற்றொரு பெயர் உண்டு. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள் என்று கூறினார்.

Categories

Tech |