Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோதிய பைக்… “தாய், மகன் உயிரிழப்பு”… வேலை முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட சோகம்..!!

சத்தியமங்கலம் அருகே டெம்போ மீது பைக் மோதிய விபத்தில், தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து, கோபி சாலை வழியாக அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுபுறம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தாளவாடிக்கு தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது.

இதற்கிடையில் சத்தியமங்கலத்திலிருந்து கட்டட வேலையை முடித்துக்கொண்டு,பைக்கில் சின்னம்மாள் என்ற பெண்ணும், அவரின் மகன் சாமிநாதனும் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, தேங்காய் மூட்டை ஏற்றி வந்த டெம்போவின் டயர் திடீரென வெடித்ததில், வாகனம் நிலைதடுமாறி சாலையில் சரிந்தது..

erode-son-and-mother-died-after-three-vehicles-crashed-one-by-one

அதனைத் தொடர்ந்து, அந்தவழியே வந்த சாமிநாதனின் பைக், டெம்போ மீது வேகமாக மோதியதில் தாய் மற்றும் மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். அதன்பின் இருவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சைப் பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

முன்னதாக அரிசி லோடு ஏற்றி வந்த லாரியின்டிரைவர், இந்த பைக் விபத்தைக் கண்டு லாரியை நிறுத்துவதற்காக பிரேக் பிடித்ததில், நிலைதடுமாறி லாரி கவிழ்ந்ததில், கார்த்திக் மற்றும்  ரஞ்சித்குமார் என்ற இரு ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.

இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. சத்தியமங்கலம், கோபி சாலையில் நிகழ்ந்த இந்த விபத்துகள் காரணமாக, அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. விபத்தில் தாய் மற்றும் மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |