கன்னியாகுமரி மாவட்டம் செட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பலீலா. இவருக்கு வயது 45.. இவருடைய கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், மார்த்தாண்டத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புஷ்பலீலா பணிபுரிந்து வந்தார். இவர், சுய உதவிக் குழுக்களில் தலைவியாகவும் செயல்பட்டு வந்தார்.. இந்தநிலையில் புஷ்பலீலா அதிக கடன்தொகை பெற்றதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 4 மாதங்களாக அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலையில்லாத காரணத்தால் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
புஷ்பலீலாவை தனியார் வங்கிகள் குழு கடனை கட்டுமாறு வற்புறுத்தி வந்ததால் மன வேதனைக்கு ஆளானதாக தெரிகிறது. இந்தநிலையில், திடீரென இன்று கணவர் வெளியில் சென்ற நேரத்தில் பிள்ளைகள் 2 பேரையும் வெளியில் விளையாட சொல்லி விட்டு வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து இறந்து போன தாயின் சடலத்தை பார்த்த பிள்ளைகளின் அழுகை சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், புஷ்பலீலா தூக்கில் தொங்கியபடி இறந்தநிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்..
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புஷ்பலீலா கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.