சீனாவில் தாய் ஒருவர் தனது குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் சீனாவில் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டதோடு 33 பேர் திடீர் வெள்ளம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தாய் ஒருவரும் அவரது 4 மாத குழந்தையும் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த நிலையில் மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் அந்த தாய் தனது குழந்தையைக் காப்பாற்றுவதற்காக மீட்புப் படையினரை கண்ட உடன் இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தையை தூக்கி பிடித்தபடி இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த குழந்தையை மீட்டு பணியாளர்களிடம் தூக்கி வீசியுள்ளார். அதன் பிறகு தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.