மோட்டார் சைக்கிளில் சாலையில் வேகமாக சென்றதால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசப் பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அய்யம்பேட்டையில் அமைந்திருக்கும் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் தனது பணிகளை முடித்துவிட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். அப்போது முத்தாலம்மன் கோவில் வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது நிலைதடுமாறி சாலையில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திகேயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு கார்த்திகேயனை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று கார்த்திகேயன் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.