ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் எதிர் எதிரே வந்த நபர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு ஹெட்லேண்ட், (South Hedland) பகுதியில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் பட்டபகலில் புகுந்த மர்ம நபர் ஒருவன் தனது எதிரே வந்தவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியுள்ளான்..
இந்த கொடூர தாக்குதலில் 5 பேர் காயங்களுடன் தப்பிய தாகவும், அதில் இரண்டு பேர் மட்டும் மிகவும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்திய அவனை கைது செய்ய முயன்றபோது தோல்வியில் முடிந்ததால் போலீசார் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்று தெரியவில்லை எனவும், மத அடிப்படைவாத கும்பலுடன் அவனுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இரண்டு பேரில் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரி என்றும், அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.