பெண் ஒருவரிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பிச் சென்ற மர்ம நபர் ஒருவரை காவல்துறையினர் தேடிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரி அம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் காலை நேரத்தில் அதே பகுதியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய நடந்து சென்றுள்ளார். அப்போது 30 வயதுடைய வாலிபர் ஒருவர் சபரி அம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இது பற்றி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி இச்சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் திருடிச்சென்ற நகையின் மதிப்பானது 90, 000 இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.