எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஃபாஸ்ட்டேக் அறிமுகம் செய்தது. அப்போது நான்கு வங்கிகளில் மொத்தமாக ஒரு லட்சம் ஃபாஸ்ட்டேக் விநியோகித்தனர்.
2017ஆம் ஆண்டில் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்தது. 2018ல் 38 இலட்சமாக உயர்ந்தது. இந்நிலையில் ஜனவரி 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறை இந்த ஃபாஸ்ட்டேக். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989கீழ், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த ஃபாஸ்ட்டேக் கட்டாயமாகும். அதேபோல fc வாங்கும் போது ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களில் பாஸ்டேக் கட்டாயம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறைக்கு வரும் என்று எதிர்பாத்திருந்த நிலையில் வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவர்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.