பொதுவாக ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை உண்டு. அதில் தந்தையானவருக்கு சொல்லவே வேண்டாம். தன்னிடம் பணம் இல்லை என்றாலும் தங்களுடைய குடும்பத்திற்கு இது செய்ய வேண்டும், அது செய்ய வேண்டும் என ஒரு பெரிய லிஸ்டையே வைத்திருப்பார்கள். அதில் ஒன்றுதான் தங்கள் குடும்பத்துக்கென தனியே ஒரு கார் வாங்கி தங்களுடைய வீட்டின் முன்னால் நிறுத்த வேண்டும் என்பதாகும். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறுவதற்கு போதுமான பணம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் உண்மை.
இதே போல் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தந்தை தன்னுடைய குடும்பத்திற்கு என்று சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அவரிடம் கார் வாங்குவதற்கு போதுமான பணம் இல்லை. அதனால் அவர் பணம் கொடுத்து கார் வாங்குவதற்கு பதிலாக தானாகவே புதிதாக ஒரு காரை வடிவமைத்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். இதற்கு தேவையான பொருட்களை அவர் பழைய இரும்பு கடைகளிலும் கேரேஜ்களிலும் இருந்து வாங்கியிருக்கிறார். மேலும் இந்த காருக்கு தேவையான மோட்டாரை தனது இருசக்கர வாகனத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக இது நல்ல மைலேஜ் கொடுக்கிறது என அவர் கூறியிருக்கிறார். இந்த வாகனத்தில் அதிகபட்சமாக 6 பேர் அமர்ந்து செல்லலாமா. இது குறித்து அறிந்த ஆனந்த் மகேந்திரா அவர் தயாரித்த காரை அருகிலுள்ள மகேந்திரா ஷோரூமில் கொடுத்துவிட்டு மகேந்திரா நிறுவனத்தை சேர்ந்த புதிய பொலீரோ காரை இலவசமாக பெற்று கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதன்படி அவரும் தான் வடிவமைத்த காரை மகேந்திரா நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு புதிய காரை பெற்று சென்றிருக்கிறார்.