தோசை மற்றும் இட்லி க்கான ஒரு புதிய வகையான கோஸ் சட்னி செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
நறுக்கிய கோஸ் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
புளி –சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் –தேவைகேற்ப
கடுகு – 1/4 டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.பின் அதனுடன் புளி , உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறினால் அருமையான கோஸ் சட்னி தயார் !!!