Categories
அரசியல்

அரசியல் களத்தில் குதித்த உலக நாயகன்… “கமலின் களப்பயணம்”…. ஓர் பார்வை….!!!!!

கமலின் அரசியல் பயணம் ஓர் பார்வை.

நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர் என பன்முகத்தன்மைகளை கொண்ட கமல் மறைமுகமாக படங்களில் அரசியல் பேசி வந்தார். இதன் பின்னர் அவர் நேரடியாக அரசியல் களத்தில் குதித்தார். இவர் சமூக வலைதளங்களில் அரசியல் குறித்து விமர்சித்து வந்த நிலையில் தான் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதன் பிறகு அரசியல் கட்சித் தலைவர்களை பலரையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். தனது அரசியல் கட்சி அறிமுக விழா பொதுக்கூட்டத்தை சென்ற 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21-ம் நாள் மதுரையில் நடத்தினார். அந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் சட்டமன்ற அமைச்சர் சோமநாத் பாரதி, விவசாய தங்க தலைவர் பாண்டியன் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது கட்சி பெயரான மக்கள் நீதி மய்யம் பெயரை தெரிவித்தார்.

அப்போது கமல், சிலர் என்னிடம் வலதா? இடதா? என கேட்கின்றார்கள். மக்களின் நீதியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. இதனால் எந்த பக்கமும் சாய்ந்து விட மாட்டோம். அதற்காகத்தான் கட்சிக்கு இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறோம் என்ற விளக்கத்தையும் கூறினார். கமல் கட்சி தொடங்கிய ஒரு வருடத்திலேயே 2019 ஆம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து அதிரடியாக களம் இறங்கினார்.

இக்கட்சி தனது முதல் தேர்தலிலேயே 3.7 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் பிறகு நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் தனக்கான வாக்கு வங்கியை தக்க வைத்தது. 2021 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலிலும் முதன்முறையாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தனது நற்பணி மன்றத்தின் மூலமும் பல்வேறு சமூக நல சேவைகளை செய்து வருகின்றார். இவர் சென்ற 2002 ஆம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் நாள் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பதிவு செய்துள்ளார். மேலும் 2010 ஆம் வருடம் ஆதரவற்றோர் இல்லத்தையும் அமைத்தார். இவரின் குடும்ப வாழ்க்கை பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கபடுகின்றது. இவர் தன்னை நாத்திகர் என கூறி கொண்டாலும் இவரை ஒரு தரப்பினர் இந்துக்களுக்கு எதிரானவர் எனவும் மற்றொரு தரப்பினர் மறைமுக இந்துத்துவம் தான் இவரின் கொள்கை எனவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |