திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சார்பில் மலையடிவாரத்தில் பஞ்சாமிர்தம் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் அங்குள்ள சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்த பஞ்சாமிர்தத்தை மலை கோவிலுக்கு கொண்டு வருவதற்கு தெற்கு கிரிவீதியில் அமைந்துள்ள சரக்குரோப் கார் சேவை இயங்கி வருகின்றது.
இந்த நிலையில் இந்த ரோப் கார் கடந்து சில நாட்களுக்கு முன்பு பழுது அடைந்துள்ளது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் ரோப் காரினுடைய கம்பி வடம் தேய்மானம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் புதிய ரோப்பை பொருத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்து சில நாட்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள ரோப் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ரோப்பை காருடன் பொருத்தும் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதன் பின் சரக்கு ரோப் கார் வழக்கம்போல் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.