நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், எப்படி முதலில் நன்றி சொல்லலாம் என்று பார்க்கலாமா ? என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான நண்பா நண்பிகள் வந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் என்னுடைய வணக்கம். நம்ம போற பயணம் நிறைவா இருக்கணும்னா நம்ப தேர்ந்தெடுக்கிற பாதை சரியாக இருக்கணும் சொல்லுவாங்க.
அப்படி நம்ம போற வழியில அறிவ சேர்த்துக்கிட்டே இருக்கணும், அன்பை கொடுத்துகிட்டே இருக்கணும், நட்ப கொடுத்துகிட்டே இருக்கணும். வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம் நன்றி மட்டும் காட்டிக்கிட்டு இருக்கணும். அப்படி ஒரு நன்றி சொல்லும் விதமாகத்தான் நீங்க எல்லாரும் எனக்கு அப்படி ஒரு அன்பை கொடுத்திருக்கிறீங்க.
அப்படி ஒரு நன்றி சொல்ற விழாவாக தான் இந்த மாதிரி ஒரு மேடை. எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. என்னை உருவாக்கிய உளிகளுக்கே என்னுடைய நன்றிகளும் என் முத்தங்களும். அப்பாடா உங்க எல்லாருக்கும் முத்தம் கொடுக்கிறதுக்கு எனக்கு ஒரு ஸ்டைல் மாட்டிச்சு. இனிமே இதான் என தெரிவித்து ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலில் வருவது போல முத்தம் கொடுத்தார். இதனை அடுத்து ரசிகர்கள் நடிகர் விஜயை பேசவிடாமல் கத்தி ஆரவாரம் செய்தனர்.