Categories
உலக செய்திகள்

எப்படி வந்துச்சுன்னு தெரியல… 17 பிள்ளைகளுக்கு கொரோனா… தாயால் பரவிய அதிர்ச்சி..!

 நியூயார்க் நகரில் குடியிருக்கும் தாயார் (brittany jencik) ஒருவர் தத்தெடுக்கபட்டவர்கள் உள்ளிட்ட 17 பிள்ளைகளுக்கு  கொரோனா வைரஸை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துவரும் பிரிட்டானி ஜென்சிக் (brittany jencik) என்பவர் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன் கொரோனவால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் தனது பிள்ளைகளுடன் சாதாரணமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவரது பிள்ளைகளுக்கும் கொரோனா அறிகுறி தென்பட தொடங்கியது.

இதுகுறித்து தாயார் பிரிட்டானி ஜென்சிக்  கூறுகையில், உண்மையில் அந்த சம்பவம் எனக்கு திகில் ஊட்டுவதாக இருந்தது. என்னுடைய வாழ்க்கை குறித்த முதன்முறையாக பயம் வந்தது. கொரோனா தொற்று தனக்கு எப்படி வந்தது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது என்றும் அவர் கூறினார். தற்போது கடுமையான  தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவையால் தானும், தனது குடும்பமும் அதிலிருந்து மீண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் நண்பர் ஒருவரின் நிறுவனம் சார்பில் தனது வீடு முழுவதுமே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளதாகவும், 12 பேர் கொண்ட குழுவில் சுமார் 2 மணிநேரம் குடியிருப்பு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நியூயார்க் மாகாணத்தைப் பொறுத்தவரை இதுவரை மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலியானோரின் எண்ணிக்கை 12,800 ஆகவும், ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை பார்த்தோமென்றால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரத்து 913 ஆகவும்  தற்போது இருக்கிறது.

Categories

Tech |