Categories
திருச்சி திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி முகாம் சிறையிலிருந்த நைஜீரிய கைதி விடுவிப்பு..!!

திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரிய கைதியை காவல் துறையினர் அவரது நாட்டிற்கே அனுப்பி வைத்தனர்.

நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் மதுபுச்சி ஸ்டான்லி(32). இவர் 2003ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அதன் பின்னர் நாடு திரும்பாமல் பாஸ்போர்ட்டையும் அழித்துவிட்டார். பின்னர் தனது பெயரை ஸ்டீபன் பவுல் அப்புச்சி என்று மாற்றிக் கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

Image result for A Nigerian prisoner detained in Trichy

திருப்பூரில் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த மதுபுச்சியை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் அடைத்திருந்தனர். 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய மதுபுச்சியை, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் கைது செய்தனர்.

Image result for நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதி திருச்சி

இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரை விடுதலை செய்த காவல் துறையினர் சென்னை விமான நிலையத்திலிருந்து நைஜீரியாவுக்கு அனுப்பிவைத்தனர்.

Categories

Tech |