Categories
உலக செய்திகள்

“இதுனால தான் புவிவெப்பம் அதிகமாகுது”…. மாட்டுச் சாணத்தால் ஏற்படும் விளைவு…. பிரபல நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம்….!!

நார்வேயை சேர்ந்த நிறுவனம் ஒன்று கால்நடை சாணத்திலிருந்து வெளியேறும் அமோனியா மற்றும் மீத்தேன் வாயுவை குறைக்க தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

கார்பன்-டை-ஆக்சைடை விட மாட்டு சாணத்தில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு 10 மடங்கு அதிகமாக வெப்பத்தை உள்ளிழுத்து கொள்வதினால் புவி வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நார்வேயை சேர்ந்த N2 Applied என்ற நிறுவனம் அமோனியா மற்றும் மீத்தேன் வாயுவை செயற்கை முறையில் உருவாக்கப்படும் மின்னலை சாணத்துடன் செலுத்துவதன் மூலம் குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் சாணத்தில் உள்ள 95% அமோனியா மற்றும் 99% மீத்தேன் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குறைக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |