Categories
உலக செய்திகள்

என்ன காரணம்னு தெரியல..! தற்காலிகமாக மூடப்பட்ட அணுமின் நிலையம்… அதிகாரி வெளியிட்ட தகவல்..!!

ஈரானில் உள்ள அணு மின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் கடலோர புஷ்ஷொ நகரில் உள்ள அணுமின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக சனிக்கிழமை மூடப்பட்டுள்ளதாகவும், மூன்று முதல் நான்கு நாட்கள் தொடர்ந்து மூடப்படுவதால் மின்தடையும் ஏற்படலாம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈரான் மின்சார ஆற்றல் நிறுவனத்தின் அதிகாரி கொலாமலி ரக்ஷனிமெஹா தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அணுமின் நிலையம் ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதனை அவசரகால நடவடிக்கையாக மூடுவதற்கான காரணம் என்ன வென்று அவர் குறிப்பிடவில்லை. அதேசமயம் அவசரகால நடவடிக்கையாக இந்த அணுமின் நிலையம் மூடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |