செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, நான் டாய்லெட் பேப்பர் என்று முரசொலியை விமர்சித்து இருந்தேன். அதை டாய்லெட் பேப்பர் கூட பயன்படுத்தக் கூடாது என்று… கலைஞர் அவர்கள் கேட்டார்கள், பிஜேபி எங்கே இருக்கு ? இங்கேயும், அங்கேயும் ஒன்னு, ஒன்னா இருக்கின்றது சொன்னார்கள். இன்றைக்கு அந்த முரசொலியில் ஒரு பக்கம் எனக்கு கொடுக்கிறார்கள், ஒரு பேஜ் பப்ளிசிட்டி முதல் வரியில் ஆரம்பித்து கடைசிவரை வரைக்கும் திட்டுகிறார்கள், திட்டுகிறார்கள், திட்டுகிறார்கள்.
அதை அவர்கள் வீட்டிலிருந்து பெண்கள் படித்தாலே தூக்கி டாய்லெட்டில் போட்டியிடுவார்கள். முரசொலியில் என்னைப் பற்றி, ஆளுநரை பற்றி எழுதுகின்ற கருத்துக்களை திமுக குடும்பத்தில் இருக்கின்ற பெண்களே படிக்க முடியாது. இதெல்லாம் அவர்களுக்கு சாதாரணம். அதைப்பற்றி கவலைப்பட போவது கிடையாது. நமக்கு பப்ளிசிட்டி தேடி கொடுக்க வேண்டும் என்று நண்பர்கள் முயற்சி செய்தால் அவர்களை வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார்.