Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இதை பார்க்க முடியுமா..? நவம்பர் 19-ல் பகுதி சந்திர கிரகணம்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

பூமியில் பகுதி சந்திர கிரகணம் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி அன்று ஏற்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு உள்ளிட்ட மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நாள் ஆகும். இந்த சந்திர கிரகணம் பௌர்ணமி நாள் அன்று ஏற்படும். அதன்படி பூமி நிலவின் மீது விழக்கூடிய சூரிய ஒளியை பகுதி அளவு மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் எனவும், பூமி நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை முழுவதுமாக மறைத்தால் அது முழு சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் பூமியில் பகுதி சந்திர கிரகணம் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி அன்று ஏற்பட உள்ளது.

இந்த பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் அசாமின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மிகக் குறுகிய நேரம் மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் வட அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பகுதிகள், தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா உள்ளிட்ட சில பகுதிகளில் கிரகணம் தெரியும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பகுதி சந்திர கிரகணம் 12.48-க்கு தொடங்கி 16.17-க்கு முடிவு பெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 600 ஆண்டுகள் மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வருகின்ற 2022-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறும் என்றும், இந்தியாவிலிருந்து இதனை காண இயலாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் முழு சந்திர கிரகணத்தை நவம்பர் 8, 2022 அன்று காணமுடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |