Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இன்று முதல்…. அனைவருக்கும் அனுமதி – கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் சிறியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்டு 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், வயதானவர்களும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் இன்று முதல் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று பூஜை பொருட்கள் மற்றும் சுவாமிக்கு மாலை சாத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் சுவாமிக்கு மாலை மற்றும் பூ வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பூஜை பொருட்களுக்கு மற்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து கோபுர வாசல்களில் இரண்டில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் மீதமுள்ள கோபுர வாசல்களை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |