Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நோயாளி ஒருவர் வெட்டிக்கொலை… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

அரசு இராசாசி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று அதிகாலை நோயாளி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையயும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கரும்பாலையில் வசித்துவரும் முருகன் என்பவர் நரம்புத் தளர்ச்சி காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் விரிவாக்க கட்டடத்தில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை அம்மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து சிகிச்சை பெற்று கொண்டிருந்த முருகனை சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

நோயாளி வெட்டிக் கொலை

கரும்பாலை பகுதியில் கடந்த ஓராண்டிற்கு முன்பாக கொலைச் சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு பழிதீர்க்கும்விதமாக இன்று முருகன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து மதுரை மாநகர காவல் துறை துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.. அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பொதுமக்களின் முன்பு, நோயாளி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மதுரையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |