பிரித்தானியாவில் ஒரு நபர் தனது வீட்டிற்கு வந்த போலீசாரை அருவருப்பு மிக்க செயலால் மிரட்டியுள்ளதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.
பிரித்தானியாவின் பெர்த் நகரில் 38 வயதான Albert McCafferty என்ற நபர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் Albert McCaffertyன் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர்.
அப்போது Albert McCafferty, போலீஸாரை எதிர்த்து பேசியுள்ளார். பின்னர் தனது கையால் மூக்கின் சளியை எடுத்து எனக்கு கொரோனா உள்ளது என கூறியுள்ளார். மேலும் போலீசார் மீது சளியை தடவி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் Albert McCafferty வீீட்டில் இருந்த போலீசார் மேலும் சில அதிகாரிகளை வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் ஆஜரான Albert McCafferty, போலீசாரை மிரட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் Albert McCafferty குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த மாதம் கடைசிவரை அவருக்கான தண்டனையை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பாக Albert McCaffertyக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.