கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் காவல்துறையினர் அவர்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் இருக்கும் சினிமா தியேட்டர் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஒருவர் தப்பிச் ஓட முயற்சித்துள்ளார். உடனடியாக போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்திய போது அவர் உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பதும் அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.