டிப்பர் லாரியில் மணல் கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் வழிமறித்தனர். அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் டிப்பர் லாரியை ஓட்டி வந்த கல்பூண்டியைச் சேர்ந்த பிரஷாந்த் என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியுடன் மணலையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.