Categories
தேசிய செய்திகள்

நடந்து போங்க… 1 கி.மீ தந்தையை தோளில் தூக்கி சென்ற மகன்… கண்கலங்க வைத்த சம்பவம்!

கேரளாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  65 வயது தந்தையை அவரது மகன், 1.கி.மீ தூரத்திற்கு தோளில் தூக்கியபடி நடந்த சம்பவம் கண்கலங்க வைக்கிறது..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டதையடுத்து, புனலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் வீட்டுக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்து செல்லும் வழியில் காவலர்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தியுள்ளனர்.. அப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறித்த ஆவணங்களை காட்டியும் போலீசார் அனுமதியளிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்..

Man forced to carry ailing father on foot in Kerala after police ...

இதையடுத்து அவர்களை போலீசார் நடந்து செல்ல்லும்படி கட்டாயப்டுத்தியுள்ளனர்.. மேலும் எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்யாததால், சுமார் 1 கிமீ தூரம் உள்ள வீட்டிற்கு முதியவரை (அப்பா) தோளில் வைத்து தூக்கிக்கொண்டு நடந்துள்ளார் அவரது மகன். இந்த காட்சியை பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், நெஞ்சை நொறுக்கும் விதமாகவும் இருக்கிறது.. இந்த சம்பவம்  கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கேரளாவில் இது போன்ற இரக்கமற்ற செயல் முகம் சுழிக்க வைக்கிறது..

இதுதொடர்பாக தகவலறிந்த கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. நேற்றுவரை கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 388 ஆக உள்ளது. இதில், 218 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |