Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடிபழக்கம் அதிகம் இருந்ததினால் வயிற்று வலி ஏற்பட்டு அதை தாங்க முடியாமல் ஆட்டோ ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய உறவினர் பெண்ணான மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து காளிராஜிக்கு குடி பழக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அதை தாங்க முடியாததால் தனது தோட்டத்தின் பம்ப்செட் மோட்டார் கிணற்றில் வைத்திருந்த மருந்தை எடுத்து மதுபானத்தில் கலந்து குடித்து விட்டு வீட்டில் வந்து தூங்கியுள்ளார். பின்னர் நெடுநேரமாகியும் அவர் படுக்கையில் இருந்து எழுந்து வராத காரணத்தினால் குடும்பத்தினர் அவரை எழுப்ப முயற்சி செய்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இது பற்றி காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காளிராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |