வயலில் மேய்ந்து காளை மாட்டின் காலை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சார்ந்த ஆனந்த் மாட்டுவண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் காளை மாடு வீட்டின் அருகில் உள்ள மந்திரியின் வயலில் உள்ள பயிர்களை மேய்ந்துள்ளது. இதனை அறிந்த வயல் உரிமையாளரின் உறவினரான காமராஜ் என்பவர் இரக்கமின்றி மாட்டின் காலை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் கால் முறிந்த நிலையில் மாடு வயலில் சாய்ந்து கிடந்தது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் ஆனந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாட்டின் கால் பலமாக சேதமடைந்துள்ளதாகவும் சரி செய்வது கடினம் என்பதையும் கூறியுள்ளார்.இப்போது மாடு உயிருக்கு போராடிய நிலையில் இருக்கிறது. இதுகுறித்து ஆனந்த் நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாட்டின் காலை வெட்டிய நபரை மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.