மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் மகனூர்ப்பட்டி ஊரைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் பாலாஜி அதே ஊரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற போது நண்பன் வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார ஒயரை தெரியாமல் தொட்டுளார்.
அப்போது பாலாஜி மீது மிசாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலாஜியின் தந்தை வேடியப்பன் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.