தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய வீட்டில் கடந்த 2 வருடங்களாக வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப், செல்போன் போன்றவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து நடிகை பார்வதி நாயர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் என்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த நபர் வீட்டிலிருந்த 6 லட்சம் மற்றும் 3 லட்சம் மதிப்பில் ஆன 2 கைக்கடிகாரங்கள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடி சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரபலமான ஒரு நடிகையின் வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது