ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போது சிறுவன் ஒருவன் தான் இருந்த இருக்கையிலேயே படுத்து தூங்குவது போன்றபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடப்பு கல்வியாண்டு பாடங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யும் நோக்கத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறன.
இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது. பொதுவாக வகுப்புகளில் பாடம் நடத்தும் போது மாணவர்கள் சிலர் அசந்து தூங்கி விடுவார்கள். அதேபோல ஆன்லைன் வகுப்பு நடக்கும்போதும் சிலர் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் ஒன்று புகைப்படமாக்கப்பட்டுள்ளது.
அதில் ’Zoom’ வீடியோ கால் மூலம் ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.. அப்போது லேப்டாப்பில் வகுப்பை நன்றாக கவனித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே படுத்து தூங்குவது போன்று போட்டோ வெளியாகியுள்ளது.
சமூகவலைதளமான டுவிட்டர் பக்கத்தில், காரா மெக்டொவல் என்ற பெண் வெளியிட்டதாவது, “40 நிமிட வீடியோ அழைப்பில் எனது மழலையர் பள்ளி மொத்த மனநிலை என பதிவிட்டு இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த போட்டோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது எனற தகவல் வெளியிடப்படவில்லை.
ஆன்லைன் வகுப்பின்போது சிறுவன் தனது இருக்கையிலேயே கால்நீட்டி படுத்து தூங்குவது போன்ற அந்த போட்டோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், 2020 ஆம் ஆண்டின் மனநிலை இது தான் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
My Kindergartner on a 40 minute video call is a total mood. pic.twitter.com/WE2RHoFZhM
— Kara McDowell ☄️👑 Updates Only (@karajmcdowell) August 7, 2020