வள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு அணிவிதற்காக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வள்ளுவர் சிலையை அவமதித்த கயவர்களை பிடிக்க போலீஸால் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அவமதிக்கப்பட்ட வள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிந்து, தீபாராதனை காட்டி, விபூதி இட்டு, ருத்ராட்ச மாலை அணிவித்து வழிபட்டார். இதையடுத்து எந்த அனுமதியுமின்றி இவ்வகையான சர்ச்சை செயலில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தஞ்சை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவரை கைதுசெய்து காவல் கண்காணிப்பு நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர். இவர் கும்பகோணம் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.