புளோரிடாவில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் விழுந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானம் ஆழமற்ற பகுதியில் விழுந்ததால் நீரில் மூழ்கவில்லை இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.