Categories
உலக செய்திகள்

BREAKING: பாகிஸ்தானில் 90 பேருடன் சென்ற விமானம் நொறுங்கியது ….!!

பாகிஸ்தானில் ஏர்பஸ் A320 விமானம் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. 90 பேருடன் சென்ற விமானத்தில் விமான பணியாளர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்டோரும் சேர்த்து 100 பேர் இருப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது.

இந்த விமானமானது இஸ்லாமாபாத் கராச்சியில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குறைந்த செலவில் செல்லக் கூடியதாகும். இதில் பயணித்த 100பேரின் கதி என்னவென்று அதிகாரபூர்வமாக ஏதும் தெரியாதநிலையில் தற்போது மீட்புப்பணி நடைபெற்று வருகின்றது. விமான விபத்தால் அந்த பகுதியில் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது.

Categories

Tech |