பின்னர் அந்த இரண்டு வாகனத்தில் ஒரு வாகனத்திற்குள் இருந்து ஒருவர் பதற்றத்துடன் வந்து போலீஸ் வாகனத்தை நிறுத்துமாறு கூறி, ‘என்னுடைய மனைவி பிரசவ வலியால் மிகவும் துடித்து கொண்டிருக்கிறார்’, ஏதாவது உதவி செய்யுங்க சார், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே பிரசவம் ஆகிவிடும் போல் தெரிகிறது. என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. என் மனைவியாலும் ஏதும் செய்ய இயலவில்லை’ என கண்ணீருடன் அந்த நபர் கூறினார்.
அதன்பிறகு உடனே போலீஸ் அதிகாரி டீன், தனது வாகனத்திற்கு சென்றார். தான் வைத்திருந்த கையுறைகளை எடுத்து வந்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். நல்லபடியாக குழந்தை பிறந்தவுடன் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்த பின் தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. ஆனாலும் வாகனஓட்டிகள் அதை பெரிதாக எடுக்கவில்லை. போலீசார் செயலை கண்டு பாராட்டினர். அதன் பின் டீன் தனது பணிக்கு திரும்பினார். டீனின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்களும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து கொண்டு வருகின்றன.